Ad Widget

யாழில். இனவாதக் கருத்துக்களை வெளியிட்ட இருபொலிஸ் உத்தியோகஸ்தர்கள் விளக்கமறியலில்!!

யாழில் சக பொலிஸ் அதிகாரிகளுடன் இனவாதக் கருத்துக்களைத் தெரிவித்து மோதலில் ஈடுபட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸாரின் விடுதிக்குள் நேற்று முன்தினமிரவு மதுபோதையில் உள்நுழைந்த குறித்த பொலிஸ் அதிகாரிகள் இனவாதக் கருத்துக்களைத் தெரிவித்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அடுத்து இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை நிர்வாக ரீதியான விசாரணைகளை முன்னெடுத்த மூத்த பொலிஸ் அத்தியட்சகர் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் , பணி இடைநிறுத்தம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts