யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்டு மக்களின் அவசர அழைப்புகளிற்கு உடன் அணுகலை வழங்கிப் பொதுமக்கள் மற்றும் பொதுச்சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் விசேட பொலிஸ் சேவை யாழ்மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியேட்சகர் (SSP) ஜெ.பி.எஸ். ஜெயமகா, யாழ்மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியேட்சகர் (ASP) கே. ஏ. ஈ. என். டில்றுக் ஆகியோரின் தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்ட யாழ்ப்பாண பொலிஸ் தலைமையக பொலிஸ் அத்தியேட்சகர் (HQI) ஆர். எம். பி. செனவிரட்ண அவர்களின் முழுமையான திட்டமிடலின் கீழ் நேற்று 21.10.2025 ஆரம்பமாகியுள்ளது.

குறித்த சேவைக்காக விசேட தொடபு எண்ணை யாழ்ப்பாண பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 021 222 2221 இச்சேவை யாழ்ப்பாணப் பொலிஸ் தலைமையக பொலிஸ் அத்தியேட்சகர் (HQI) ஆர். எம். பி. செனவிரட்ண அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்டு இடம்பெறும் பின்வரும் அசம்பாவிதங்கள் தொடர்பில் மக்கள் முறைப்பாடளித்தால் உடனே குறித்த இடத்திற்கு பொலிஸார் வரும் வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1. வாகன நெரிசல் மற்றும் விபத்து
3. பாலியல் துஸ்பிரயோகம்
4. திருட்டு மற்றும் மோதல்
5. போதைவஸ்து பதுக்கல், விநியோகம் மற்றும் பாவனை
6. ஆழ் கடத்தல் மற்றும் கொலை
7. நிதி மோசடி மற்றும் சட்டரீதியற்ற வாணிபம்
9. குடும்ப வன்முறை
மேற்படிப் பிரச்சினைகளிற்கான பொலிஸாரின் நேரடியான வருகை தற்போது யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கே முழுமையாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவு தவிர ஏனைய பிரிவுகளில் இடம்பெறும் மேற்படிக் குற்றங்கள் தொடர்பில் 021 222 2221 என்ற இலக்கத்திற்கு அறிவிக்க முடியும். அவர்கள் நேரடியாகக் களத்திற்கு வரமுடியாவிட்டாலும் குறித்த பிரச்சினை தொடர்பில் முறைப்பாடு கிடைத்த பிரிவிற்குரிய பொலிஸாரிற்கு உடனடியாக அறிவித்து உதவுவார்கள்.
விரைவில் பொலிஸாரின் இவ் அவசர அணுகல்சேவை யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவுபோன்று யாழ்மாவட்டத்தின் ஏனைய பொலிஸ் பிரிவுகளிற்கும் விரிவுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.