Ad Widget

யாழின் சில பகுதிகளில் மின்விநியோகம் தடை

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த, தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்ற வேண்டியுள்ளதால் புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும் புதிய மின்மாற்றி நிறுவுவதற்காகவும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என யாழ். மாவட்ட மின்பொறியியலாளர் தெரிவித்தார்.

நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் பிறவுண் வீதி, கஸ்தூரியார் வீதி, கன்னாதிட்டி, மாவடி, தட்டார்தெரு தொடக்கம் முட்டாஸ்கடைச் சந்தி வரையான பிரதேசம், திருநெல்வேலிப் பிரதேசம், பரமேஸ்வரா சந்தி, கந்தர்மடம், ஆரியகுளம், ஸ்ரான்லி வீதி, வேம்படி, குருநகர், பாசையூரின் ஒரு பகுதி, மனோகரா பிரதேசம், குஞ்சர்கடையின் ஒரு பகுதி, நவிண்டில், பொலிகண்டி, வல்வெட்டி, வல்வெட்டித்துறை, தொண்டமனாறு, உடுப்பிட்டி, கந்தரோடை, மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, இளவாலை, சங்கானை, மாதகல், வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், காரைநகர் பிரதேசம், தீவகப் பிரதேசம், அராலி ஆகிய இடங்களிலும்

நாளை மறுதினம் ஞாயிற்றுக்;கிழமை யாழ் பிறவுண் வீதி, கஸ்தூரியார் வீதி, கன்னாதிட்டி, மாவடி, தட்டார்தெரு தொடக்கம் முட்டாஸ்கடைச் சந்தி வரையான பிரதேசம், திருநெல்வேலிப் பிரதேசம், பரமேஸ்வரா சந்தி, கந்தர்மடம், ஆரியகுளம், ஸ்ரான்லி வீதி, வேம்படி, குருநகர், பாசையூரின் ஒரு பகுதி, மனோகரா பிரதேசம், உடுப்பிட்டி முதல் வீரபத்திரர் கோவில் வரையான பிரதேசம், நல்லூரிலிருந்து ஆனைப்பந்தி வரையான பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின்விநியோகம் தடைப்படும் என்று தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை மருதனார்மடம், உடுவில், சங்குவேலி, மானிப்பாய், கட்டுடை, சுதுமலை, ஆனைக்கோட்டை, நவாலி, மாலு சந்தியிலிருந்து வதிரி சந்தி வரையான பிரதேசம் ஆகிய இடங்களிலும்

4.12.2012 செவ்வாய்க்கிழமை மருதனார்மடம், இணுவில், கோண்டாவில், தாவடி, குளப்பிட்டிப் பிரதேசம், கொக்குவில், நாச்சிமார் கோவிலடி, கோம்பயன்மணல் பிரதேசம், வீரவாணி, ஊறணி, குஞ்சர்கடையின் ஒரு பகுதி, நவிண்டில், பொலிகண்டி, வல்வெட்டி, வல்வெட்டித்துறை, தொண்டமனாறு, உடுப்பிட்டி ஆகிய இடங்களிலும்

5.12.2012 புதன்;;கிழமை கந்தரோடை, மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, இளவாலை, சங்கானை, மாதகல், வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், காரைநகர் பிரதேசம், தீவகப் பிரதேசம், அராலி, களபூமி பிரதேசம், காரைநகர் டிப்போ பிரதேசம், தீவகப் பிரதேசம், மருதனார்மடம், உடுவில், சங்குவேலி, மானிப்பாய், கட்டுடை, சுதுமலை, ஆனைக்கோட்டை, நவாலி, நல்லூரிலிருந்து ஆனைப்பந்தி வரையான பிரதேசம் ஆகிய இடங்களிலும்

6.12.2012 வியாழக்கிழமை மருதனார்மடம், இணுவில், கோண்டாவில், தாவடி, குளப்பிட்டிப் பிரதேசம், கொக்குவில், நாச்சிமார் கோவிலடி, கோம்பயன்மணல் பிரதேசம், குஞ்சர்கடையின் ஒரு பகுதி, நவிண்டில், பொலிகண்டி, வல்வெட்டி, வல்வெட்டித்துறை, தொண்டமனாறு, உடுப்பிட்டி ஆகிய இடங்களிலும்

7.12.2012 வெள்ளிக்கிழமை நல்லூரிலிருந்து ஆனைப்பந்தி வரையான பிரதேசங்களிலும் காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரையும் மின்விநியோகம் தடைப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் பிரதேசங்களிலுள்ள மின்விநியோக மார்க்கங்களுக்கு இடையூறாகவுள்ள மரங்கள், மரக்கொப்புக்கள், தென்னை ஓலைகள், பனை ஓலைகள் என்பவற்றை வெட்டியகற்றி தடையற்ற மின்சார விநியோகத்தை பெற்றுக்கொள்ள மின்சார சபைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

Related Posts