Ad Widget

மோடிக்கு விக்கி எழுதிய கடிதத்தினை இந்திய ஊடகம் திரிவுபடுத்தியுள்ளது

பிரேமானந்தா ஆச்சிரம வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார் என இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியையிட்டு தாம் ஆச்சரியமடைவதாகத் தெரிவித்திருக்கும் வடமாகாண முதலமைச்சர் செயலக வட்டாரங்கள், குறிப்பிட்ட செய்தி திரிவுபடுத்தப்பட்ட ஒன்று எனவும் சுட்டிக்காட்டியுள்ளன.

பிரேமானந்தா ஆசிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில், பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்ட கமலானந்தா, பாலன் எனப்படும் பாலேந்திரன், சதீஸ் எனப்படும் சதீஸ்குமார் ஆகிய மூவரையுமே விடுதலை செய்யக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் மகள் அத்தண்டனையை ரத்துச் செய்யக்கோரி இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை முதலமைச்சரின் ஊடாக அனுப்பிவைத்துள்ளார்.

அந்தப் பெண்ணின் கடிதத்தை இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைத்த முதலமைச்சர், “சம்பந்தப் பட்டவர்கள் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுடைய கடிதத்தை உங்களுடைய கவனத்துக்கு அனுப்பிவைக்கிறேன்” என ஒரு குறிப்பை இணைத்துள்ளார்.

இதனைவிட கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யுமாறு முதலமைச்சர் கோரவில்லை எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

cm-letter-1

cm-letter-2

cm-letter-3

தொடர்புடைய செய்தி –

பிரேமானந்தாவின் சகாக்களை விடுவிக்கக் கோரி மோடிக்கு விக்கி கடிதம்!

Related Posts