Ad Widget

மொழி உரிமைமீறல் குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் உடனடியாக முறையிடவும்

Human_rightsபொலிஸ் நிலையங்களில் மொழி உரிமை மீறப்பட்டால் அது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவிடம் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த நிலையம் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கூடுதலாக மொழி உரிமை மீறப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளது.

எனினும் மொழி உரிமைமீறல் தொடர்பில் பாதிக்கப்படும் நபர்கள் முறைப்பாடுகளை வழங்காத காரணத்தால் அதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது உள்ளது.

இந்த நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பிரதேசங்களில் தமிழ்மொழி உரிமை மீறல்களும் சிங்களப் பிரதேசங்களில் சிங்கள மொழி உரிமை மீறல்களும் இடம் பெறுகின்றன.

குறிப்பாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் வழங்கப்படும்போது முறைப்பாடுகளை எந்த மொழியில் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் தெரிவிப்பது, அவர்கள் முறைப்பாட்டை எவ்வாறு விளங்கிக் கொண்டு பதிவுகளை மேற்கொள்கின்றனர் என்பது முறைப்பாட்டுக்காரர்களுக்கு விளங்காத நிலை உள்ளது.

இதனால் பொலிஸ் நிலையங்களில் இருமொழி சார்ந்தவர்களும் கடமைக்கு அமர்த்தப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக முறைப்பாடுகளை பதிவுசெய்வோர் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் உரையாடக்கூடியவராக இருத்தல் வேண்டும்.

எனினும் இந்த நிலை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரிய பிரச்சினையாக உள்ளது.

மொழி உரிமை மீறல் தொடர்பில் பாதிக்கப்படுகின்ற நபர் முறைப்பாடுகளை வழங்க முன்வரவேண்டும். தாம் சார்ந்த பிரதேசத்தில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவிடம் சென்று மொழி உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடுகளை வழங்குமாறு தெரிவித்துள்ளது.

இருமொழி சார்ந்தவர்களும் கடமைக்கு அமர்த்தப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக முறைப்பாடுகளை பதிவு செய்வோர் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் உரையாடக் கூடியவராக இருத்தல் வேண்டும்.

Related Posts