Ad Widget

மைத்திரிக்கு தமிழர் வாக்களித்தது அவர் மீதுள்ள காதலால் அல்ல

ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தது அவர் மீது கொண்ட காதலால் அல்ல, அது இராஜதந்திரம் எனத் தெரிவித்துள்ளார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளரும் தென்மராட்சி அமைப்பாளருமான க.அருந்தவபாலன்.

யாழ்ப்பாணம் வரணிப் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமது விடுதலைப் போராட்ட காலத்தில் இந்திய அமைதிகாக்கும் படை இங்கே வந்தபோது அவர்களால் எமது போராட்டம் நசுக்கப்பட்டது.

அதுவரை பிரபாகரன் யாருடன் போரிட்டு வந்தாரோ அந்த பிரேமதாசவுடன் கைகுலுக்கி இந்திய இராணுவத்தை இங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்பினார்.

அதன் பின்னர் எமது போராட்டம் வீறுகொண்டெழுந்தது. இதை நாங்கள் இராஜதந்திரம் என்கின்றோம். இதேபோல்தான், எங்கள் மண்ணை அபகரித்துக் கொண்டிருந்தவர்களை எங்கள் நிலங்களில் பௌத்த கோயில்களை நிறுவிக்கொண்டிருந்தவர்களை அகற்றுவதற்காக மைத்திரிக்கு வாக்களித்தோமே தவிர மைத்திரி மேல் கொண்ட காதலால் அல்ல.

எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஒரு வாய்ப்பாக அந்தத் தேர்தலை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். இதுவும் ஒரு இராஜதந்திரந்தான் எனவும் அருந்தவபாலன் இதன்போது குறிப்பிட்டார்.

Related Posts