Ad Widget

மூளையில் தோன்றும் எண்ணங்களை கணினி மூலம் பகிர்ந்து கொள்ளும் தொழில்நுட்பம்!

ணினிகளை நேரடியாக நமது மூளையின் மூலம் கட்டுப்படுத்த அனுமதிக்கும் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்க முயன்றுவருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்களை ஒரு நிமிடத்துக்கு 100 வார்த்தைகளை தட்டச்சு செய்ய அனுமதிக்கும் ”அமைதியான பேச்சு” என்ற மென்பொருளை உருவாக்கி வருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

ஆரம்ப நிலையில் உள்ள இந்தத் திட்டத்துக்கு, எவ்வித அறுவை சிகிச்சையும் இல்லாமல், மூளை அலைகள் எனப்படும் மூளையில் உள்ள மின் தூண்டுதல்களை கண்டறிய புதிய தொழில்நுட்பம் தேவைப்படும்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஃபேஸ்புக் நிறுவனத்தின் ரெஜினா டூகன், ” இது மக்களின் மூளையில் தோன்றும் சீரற்ற எண்ணங்களை கண்டுபிடிப்பது தொடர்பானது அல்ல’, என்று தெளிவுபடுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், ”உங்களுடைய மூளையில் தோன்றும் ஏரளாமான எண்ணங்களில் சிலவற்றை பகிர்ந்து கொள்ள நீங்கள் முடிவு செய்யலாம்” என்று கூறினார்.

”அந்த வார்த்தைகளின் பொருள் குறித்து அறிவது பற்றி நாங்கள் பேசவில்லை.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் 8 ஆம் கட்டடம் எனப்படும் ஃபேஸ்புக்கின் வன்பொருள் ஆராய்ச்சி ஆய்வகத்தின் தலைவராக இருப்பவர் டூகன். இலக்கை அடையும் விதமாக வன்பொருள் மற்றும் மென்பொருள் இரண்டையும் உருவாக்கும் நோக்கில் 60க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்களை இந்த திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Posts