Ad Widget

முள்ளிவாய்க்காலில் எனக்கும் காணி உண்டு – சீனப் பிரசை ஜுயூ சீ சாங்

இறுதிப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில் தனக்கும் காணி உண்டு என்று நேற்றுத் தெரிவித்த சீனப் பிரசை ஒருவர்,அந்தக் காணியை கடற்படையினர் முகாம் அமைப்பதற்கு வழங்க சம்மதிக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இறுதிப் போர் நடந்தேறிய முள்ளிவாய்க்காலில் 614 ஏக்கர் காணி, கடற்படையினர் முகாம் அமைப்பதற்காக சுவீகரிக் கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக சீனர் குறித்த காணிகளை அளவீடு செய்வதற்கு நிலஅளவைத் திணைக்களத்தினர் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு நேற்றுக் காலை வந்தனர்.

அப்போதுபோது குறித்த காணிகளின் உரிமையாளர்களில் 23 பேர் தமிழர்கள், தமது காணிகளை கடற்படையினர் சுவீகரிப்பதற்கு வழங்கமாட்டோம் என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் சிங்களவர் ஒருவரும், சீனப் பிரஜை ஒருவரும் தமது காணிகளை நிலஅளவை செய்வதற்கு தமக்குச் சம்மதம் என்று தெரிவித்தனர்.

சீனப் பிரஜையான ஜுயூ சீ சாங் என்பவர் சிங்களப் பெண் ஒருவரை திருமணம் முடித்துள்ளார். குறித்த சிங்களப் பெண்ணுக்கு முள்ளிவாய்க்காலில் காணி உள்ளது. அந்தக் காணியையே தற்போது சீனப்பிரஜை, கடற்படையினர் முகாம் அமைப்பதற்கு வழங்க முன்வந்துள்ளார்.

Related Posts