Ad Widget

முறையான உணவுப் பழக்கத்தால் நோய்த் தாக்கங்களை தவிர்க்கலாம்: டக்ளஸ்

முறையான சுகாதார உணவுப் பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் நோய்த் தாக்கங்களிலிருந்து எமது சமூகத்தை பாதுகாத்துக்கொள்ள முடியுமென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

mc3

யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில், மாநகர சபை எல்லையினுள் உள்ள உணவகங்களின் உரிமையாளர்களுக்கு ‘சத்துள்ள உணவும் அதன் தயாரிப்பும்’ தொடர்பான பயிற்சிப்பட்டறை யாழ். பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

Daklas-food

‘இப்பயிற்சிபட்டறையினூடாக அனைவரும் சிறந்த பயன்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். முதற்கட்டமாக யாழ். மாநகரசபை எல்லையினுள் தொடங்கியுள்ள இச்செயற்றிட்டங்கள் குடாநாடு மட்டுமல்லாது வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

சகல உணவு வகைகளை கையாளும் நிலையங்களும் துறைசார்ந்தோரும் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஒன்றிணைந்த சுகாதார உணவுப் பழக்கவழங்கங்களின் ஊடாக ஏற்படக்கூடிய தொற்று, தொற்று அல்லாத நோய்த் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதுடன், ஆரோக்கியமுள்ள சமூகமாக எமது சமூகத்தை வளர்த்தெடுக்க முடியும்’ என்றார்.

இங்கு யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா உரையாற்றுகையில்,

யாழ்ப்பாணத்தின் கல்வி நிலையில் எப்படி முன்னேற்றம் கண்டோமோ, அதேபோன்று உணவுப் பழக்கவழக்கங்களிலும் நாம் முன்னேற்றம் காண வேண்டும்.

நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது வடமாகாணத்தில் கல்வியில் முன்னேற்றம் காண்பதற்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியுடன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்து உழைத்துள்ளார்’ என்றார்.

Related Posts