Ad Widget

முரண்பாடுகளை களைந்து செயற்பட தீர்மானம்: சிவாஜிலிங்கம்

sivajilingam_tna_mpதமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளுக்குமிடையில் காணப்படும் முரண்பாடுகளை கலைந்து செயற்படும் வகையில் தீர்மானம் ஒன்று எட்டப்படும் என்று தமிழர் விடுதலை இயக்கத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல் தலைவருமான சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இம்மாத இறுதிக்குள் கைசாத்திடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முரண்பாடுகள் தொடர்பாக தமிழர் விடுதலை இயக்கம் (ரெலோ) தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருகின்றது.அந்த வகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரனுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரியுடன் கிளிநொச்சி அலுவலகத்தில் நேற்றுமாலை சந்தித்து கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடல்களின் இறுதியில், அதாவது இந்த மாத இறுதிக்குள், 5 கட்சிகளுக்குள் இடம்பெறும் முரண்பாடுகளை கலைந்து செயற்படுவதற்கான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன், தமிழரசு கட்சியுடன் முதலாம் கட்ட பேச்சு வார்த்தை முடிவடைந்துள்ளதாகவும், இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை மே 22 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

இக்கலந்துரையாடல்களின் இறுதியில், 5 கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டு, ஒற்றுமையுடன் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts