Ad Widget

முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு அவசியம்

யாழ்.மாவட்டத்தில் மக்களின் குடிநீர்த் தேவையை நிவர்த்தி செய்யும் முகமாக முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்களுக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பும் ஒத்தாசையையும் வழங்க வேண்டும்’ என பாரம்பறிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலக அரச அதிபர் பணிமனையில் திங்கட்கிழமை (06) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

dm1

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

‘தீவகம் உள்ளிட்ட யாழ்.மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதன்பிரகாரம் கிணறுகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் என்பவற்றை திருத்தம் செய்வது மற்றும் துப்பரவு செய்வதற்கு 63 மில்லியன் ரூபாய்க்குரிய திட்டங்கள் தொடர்பாக மாவட்ட செயலகத்தால் தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தோம்.

அதனடிப்படையில் எமக்கு 30 மில்லியன் ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளநிலையில் இந்நிதியை கொண்டு திட்டங்கள் முன்னுரிமையடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளன’ என தெரிவித்தார்.

இதேவேளை, மேற்படி திட்டங்களை மீளாய்வு செய்து இறுதி அறிக்கையை சமர்பிக்கும்படியும் துறைசார்ந்தோரிடம் அமைச்சர் இதன்போது கேட்டுக் கொண்டார்.

இதேபோன்று மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஏனைய செயற்திட்டங்கள் குறித்த திட்ட அறிக்கைகள் ஆராயப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர்இதன்போது வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில், சுன்னாகத்தில் நிலத்தடி நீர் மாசடைவது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

Related Posts