Ad Widget

முன்னுரிமை அடிப்படையில் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள்

BOMS_minsவலி.வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில், கண்ணிவெடி அகற்றப்பட வேண்டிய பகுதிகளில் கட்டுவனில் ஒரு பகுதி தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றி முடிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியமர்வுக்குத் தேவையான நிலப்பரப்புக்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றி முடிக்கப்பட்டுவிடும்.

இவ்வாறு தெரிவித்தார் யாழ்.மாவட்ட செயலக மிதி வெடி செயற்பாட்டலுவலர் வ.முருகதாஸ். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியமர்வுக்குத் தேவையான பகுதிகள், அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்பதற்குரிய பகுதிகள் என்பன இனங்காணப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் வலி. வடக்குப் பிரதேச செயலர் பிரிவில் அரச அதிபரால் முன்னுரிமைப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளன.

கட்டுவன் பகுதியில் ஒரு சிறிய நிலப்பரப்பிலேயே தற்போது கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எஞ்சிய பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றி அந்த நிலப்பரப்புக்கள் கையளிக்கப்பட்டுவிட்டன.

யாழ்.மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியமர்வுக்குத் தேவையான நிலப்பரப்பு மற்றும் அபிவிருத்தித் தேவைக்கான நிலப்பரப்பு என்பவற்றில் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றி முடிக்கப்படும்.

Related Posts