Ad Widget

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு பூரணத்துவத்தை எட்டுகிறது

LTTE-final-batchபுனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகத்தின் கருத்தின்படி, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 132 பேர் தற்போது புனர்வாழ்விற்குள்ளாகி வருகின்றனர்.

2009ம் ஆண்டு போர் நிறைவடைந்ததன் பின்னர் ஏறத்தாழ 12,000 விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சரணடைந்தோ அல்லது தடுப்பிற்கு உட்படுத்தப்பட்டோ இருந்தனர் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக தெரிவித்தார்.

எஞ்சியுள்ள 132 முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் தற்போது ஒருவருட புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சித் திட்டம் இலங்கை இராணுவத்தாலும், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகத்தினாலும் இணைந்து வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் நடாத்தப்பட்டு வருகின்றது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) பிரதிநிதிகளும், புனர்வாழ்விற்குள்ளாகிவருபவர்களின் உறவினர்களும் இந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை அடிக்கடி பார்வையிட்டு வருவதாக மேஜர் ஜெனரல் விஜேதிலக தெரிவித்தார்.

“மூன்று மாதத்திற்கொரு முறை நாங்கள் ஒரு பிரிவை [சமூகத்தில்] மீள இணைக்கிறோம். அடுத்த பிரிவு ஜூனில் மீள இணைக்கப்படும்,” என அவர் தெரிவித்தார்.

புனர்வாழ்விற்குட்படுத்தப்பட்டு, சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளவர்களில் 230இற்கும் மேற்பட்டவர்கள் உயர்கல்வியினைப் பெறுவதற்கு தகுதிபெற்றுள்ளதோடு, 35 பேர் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றுவருகின்றனர்.

மேஜர் ஜெனரல் விஜேதிலகவின் கருத்தின்படி, ஏற்கனவே சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளவர்களின் முன்னேற்றமும், நலன்பேணலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட பயனாளர்களின் சமூக, பொருளாதார நலன்பேணல் ஒருங்கிணைப்பு அலுவலகத்தினால் தொடர்ச்சியாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்த அலுவலகங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலுமுள்ள பிரதேச செயலங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. அரசாங்க மற்றும் கூட்டாண்மைப் பகுதி நிறுவனங்கள், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், சமூகம் ஆகிய அனைத்துடனும் ஒருங்கிணைத்து புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், அந்த மாவட்டங்களிலுள்ள அவர்களின் குடும்பங்கள் ஆகியவற்றின் வெற்றிகரமான, நீடித்து நிலைக்கக்கூடிய சமூக-பொருளாதார மீள் இணைப்பை உறுதிப்படுத்துவதே இந்த அலுவலகத்தின் பிரதான பொறுப்பாகும்.

அரசாங்கத்தால் ஆதரவளிக்கப்பட்ட புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தைப் பூர்த்திசெய்த பின்னர், முன்னாள் போராளிகள் வாழ்க்கைத் திட்டங்களை ஆரம்பிப்பதற்காக 250,000 ரூபா வரையிலான கடன்களை மிகக்குறைந்த வட்டியில் பெற உரித்துடையவர்களாகுவர்.

புனர்வாழ்வை நிறைவுசெய்த முன்னாள் போராளிகளில் இதுவரை 1,773 பேர் இந்தக் கடனைப் பெற்றுள்ளதுடன், மேலதிக விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன, என ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். கடன் வசதிக்கு மேலதிகமாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு வசதிகளை வழங்குவதற்கான வழிகளை பணியகம் ஆராய்ந்து வருகிறது.

“சிங்கப்பூரிலுள்ள கட்டுமான நிறுவனமொன்று புனர்வாழ்வளிக்கப்பட்டு, தொழிற்பயிற்சிகளைப் பெற்ற 40 பேரை வேலைக்கமர்த்துவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது,” என அவர் தெரிவித்தார்.

எந்திரவியல் திறன்கள், தகவல் தொழிநுட்பம், விவசாயம், விலங்கு வேளாண்மை, அழகுக் கலை, உணவுப் பதனிடல், கல்வி, கைவேலைப்பாடுகள், தச்சுத் தொழில், கட்டுமானம் உட்பட பல தொழில்முறைப் பயிற்சிகளை புனர்வாழ்வுக் காலம் உள்ளடக்குகிறது.

உளவியல்சார் உதவிகள், கல்வி, விளையாட்டு மற்றும் ஆன்மீக, சமய, கலாசார மேம்பாடு ஆகியவற்றையும் புனர்வாழ்வுச் செயன்முறை உள்ளடக்கியுள்ளது. மே 2009இல் போர் முடிவடைந்ததன் பின்னர் அரசாங்கம் 2.5 மில்லியன் ரூபாவினை முன்னாள் புலிப் போராளிகளின் புனர்வாழ்விற்காக செலவளித்துள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டினை அரசாங்கம் 2013இல் 300 மில்லியன் ரூபாவிலிருந்து, 500 மில்லியன் ரூபாவாக அதிகரித்தது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை ஒன்றினைப் பின்பற்றி, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேகநபர்களின் நிலையை ஆராயவும், தேவைப்படும் இடங்களில் சட்ட நடவடிக்கையை விரைவுபடுத்தவும் விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

Related Posts