Ad Widget

முன்னாள் ஆணையாளர்கள் தவறிழைத்துள்ளனர்: யாழ்.மாநகர முதல்வர்

MAYOR -yokeswareyயாழ். மாநகர சபையின் தற்காலிக ஊழியர்களின் நிரந்தர நியமனத்தில் முன்னாள் மாநகர ஆணையாளர்கள் தவறிழைத்துள்ளதாக யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தினையடுத்து யாழ்.மாநகர சபையில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

‘1992 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து தற்காலிக ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அக்காலங்களில் பதவியிலிருந்து வந்த ஆணையாளர்கள் தற்காலிக ஊழியர்களின் நிரந்தர நியமனங்கள் வழங்குவது தொடர்பில் தவறிழைத்துள்ளார்கள்.

ஊழியர்கள் கல்வித்தகைமையின் அடிப்படையில், அவர்களுக்குரிய நியமனங்களை வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு வழங்காது, தமது அரசியல் தேவைக்காக தற்காலிக ஊழியர்களைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

2009ஆம் ஆண்டு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி பதவிக்கு வந்தது. அதன்பின்பு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மத்திய அரசுக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, இன்று மாநகரசபையின் ஆளணிப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தற்போது பொதுச்சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆளணி விபரங்களின் படி, தற்காலிக ஊழியர்கள் அனைவருக்கும் சட்டங்களிற்கு அமைவாக நேர்முகத் தேர்வின் புள்ளி அடிப்படையில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும். தற்காலிக ஊழியர்களை வேலையிலிருந்து நிறுத்தவேண்டுமென்ற விருப்பம் எமக்கில்லை.

அந்த வகையில், தற்காலிக ஊழியர்களின் கல்வித் தகைமைகள் உள்ளடங்கிய விபரங்கள் புதிய மாகாணசபைக்கு அனுப்பப்பட்டு, மாகாண முதலமைச்சர் அது தொடர்பாக பரிசீலனையை மேற்கொண்டு தற்காலிக ஊழியர்களின் நிரந்தர நியமனம் குறித்து எடுக்கப்படும் தீர்மானத்தினை யாழ். மாநகரசபை ஏற்றுக்கொள்ளும்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

விஜயகாந் கொள்ளைக்கார குழுத்தலைவர் – யாழ். முதல்வர்

யாழ். மாநகர சபை ஊழியர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்

Related Posts