Ad Widget

முன்னாள் அமைச்சர்களுக்கு இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்கள்

மகிந்த ராஜபக்ச அரசில் அங்கம் வகித்த அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்களை வழங்க புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் இவர்களுக்கு அந்தந்த அமைச்சுக்களின் ஊடாக வாகனங்கள் வழங்கப்படவுள்ளதுடன் அதற்கான எரிபொருளையும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் ஊடாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்று நிருபத்தில்,

குறித்த வாகனங்களுக்கு தேவையான சாரதிகளை அமைச்சுக்களினால் வழங்குமாறு பணிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சர்களின் வாகன சாரதிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவும் இந்த சாரதிகளுக்கும் வழங்கப்படவுள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பில் சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி செயலகம் தொலைநகல் மூலம் அறிவித்துள்ளது.

Related Posts