Ad Widget

முதல்­வ­ரின் அமைச்சு மீதும் விசா­ரணைவேண்­டும் தெரி­வுக் குழுவைக் கோரும் பிரே­ரணை சமர்­ப்பிப்பு

முத­ல­மைச்­ச­ரின் அமைச்சு உள்­ளிட்ட 5 அமைச்­சுக்­கள், திணைக்­க­ளங்­க­ளில் நடை­பெற்­ற­தா­கக் கூறப்­ப­டும் ஊழல், மோசடி மற்­றும் முறை­கே­டு­கள் தொடர்­பில் தெரி­வுக் குழுவை அமைத்து விசா­ரித்து, விசா­ரணை அறிக்­கையை மாகாண சபைக்­குச் சமர்­ப்பிக்க வேண்­டும் எனக் கோரும் பிரே­ரணை அடுத்த அமர்­வில் எடுத்­துக் கொள்­வ­தற்­கா­கப் பேர­வைச் செய­ல­கத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், மீன்­பிடி மற்­றும் சுகா­தார அமைச்­சுக்­கள் மீது மாத்­தி­ரம் விசா­ரணை நடத்­து­வ­தற்கு 4 பேரைக் கொண்ட விசா­ர­ணைக் குழுவை நிய­மிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றார். இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில், அடுத்த மாதம் 6 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள வடக்கு மாகா­ண­ச­பை­யின் 98ஆவது அமர்­வில் எடுத்­துக் கொள்­வ­தற்­காக பிரே­ரணை அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கு மாகா­ண­சபை ஆளும் கட்சி உறுப்­பி­னர் அ.பரஞ்­சோ­தி­யால் பேர­வைக்­குச் சமர்­பிக்­கப்­பட்­டுள்ள பிரே­ர­ணை­யில், 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி நடை­பெற்ற வடக்கு மாகாண சபை அமர்­வில் வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­கள் பற்றி கிடைக்­கப் பெறும் முறைப்­பா­டு­கள் சம்­பந்­த­மாக மாகாண சபையே ஒரு விசா­ர­ணைக் குழு அமைக்க வேண்­டும் என்று பிரே­ர­ணையை நான் முன்­மொ­ழிந்­தி­ருந்­தேன்.

தற்­போது முத­ல­மைச்­ச­ருக்­கும், எதிர்­கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்­கும் இடை­யில் ‘சுதந்­தி­ர­மா­ன­தும் சட்­ட­பூர்­வ­மா­ன­து­மான’ விசா­ரணை நடத்­தப்­ப­ட­லாம் என்ற இணக்­கப்­பாடு ஏற்­பட்­டி­ருப்­ப­த­னால், வடக்கு மாகாண சபை­யின் அனைத்து அமைச்­சர்­கள், அமைச்­சுக்­கள், திணைக்­க­ளங்­கள் மற்­றும் நிறு­வ­னங்­க­ளில் நடை­பெற்­ற­தா­கக் கூறப்­ப­டும் ஊழல், மோசடி மற்­றும் முறை­கே­டு­கள் சம்­பந்­த­மாக விசா­ரித்து சபைக்கு அறிக்கை சமர்­பிப்­ப­தற்­காக தெரி­வுக் குழு­வொன்றை நிய­மிக்­கும் தீர்­மா­னத்தை முன்­மொ­ழி­கின்­றேன் – என்­றுள்­ளது.

Related Posts