Ad Widget

முதலாம் தவணை பாடசாலை விடுமுறை ஏப்ரல் 9இல் ஆரம்பம்

முதலாம் தவணைக்காக அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் அனைத்தும் ஏப்ரல் 19ஆம் திகதி திறக்கப்படும் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்துத் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மார்ச் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க கல்வி அமைச்சு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி 15 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட வகுப்புகளை தினசரி அடிப்படையில் நடத்தலாம்.

16-30 மாணவர்களைக் கொண்ட வகுப்புகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வாரத்திற்கு ஒரு ஒரு குழுவுக்கு மட்டுமே வகுப்புகளை நடத்த முடியும்.

30 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட வகுப்புகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சம எண்ணிக்கையிலான நாள்களில் வகுப்புகளை நடத்த முடியும்.

ஏதேனும் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் அந்தப் பகுதி பாடசாலைகள் மூடப்படும் என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு புத்தாண்டு விடுமுறை ஏப்ரல் 9 முதல் 19 வரை பத்து நாள்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என்றும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts