Ad Widget

முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பித்து வெகுவிரைவில் பிரச்சினைக்குத் தீர்வு

முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிப் பதில் உள்ள பல தடைகளையும் தாண்டி வெகுவிரைவில் மக்களின் பிரச்சினை களை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்ப டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் கீழ் உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் யாழிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்மேற் கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது பல தேவைகளையுடைய மக்கள் காணப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் உதவி செய்யக்கூடிய வசதி எமக்கு இல்லை.

அரசாங்கத்தால் தரப்படும் சொற்ப தொகையை வைத்து அதிக தேவையுடையவர்களுக்கு அதிலும் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கொடுத்து வருகிறோம்.மேலும் எமது மக்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்க வேண்டு மென விரும்புகிறார்கள். அவர்களுடைய உதவிகளையும் பெற்று எம்மால் முடிந்த பல சேவைகளை செய்து வருகிறோம்.

மக்களின் வாழ்க்கையை மேம்பாடடையக் கூடிய வகையிலான உதவிகளை நாம் செய்ய வேண்டும். வெறுமனே பாவிப்புப் பொருட்களை வழங்குவதில் பயனில்லை.

எனவே நிலைத்து நிற்கக் கூடியதும் மக்களின் வாழ்க்கை முறையை இலகுவாக்கக் கூடியதுமான உதவிகளை செய்ய வேண்டும்.

அதுவே எமது முக்கிய நோக்கமும் ஆகும்.அதனடிப்படையில் உதவிகளை செய்து வருகின்றோம். அவை போதுமான தாக இல்லை என்பது எமக்குத் தெரியும்.

வெகு விரைவில் எமது மக்களுக்கு தேவையான போதியளவு உதவிகளை செய்வதற்குரிய காலம் வரும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts