Ad Widget

முதலமைச்சர் சி.வி வராதது கவலையளிக்கிறது – விஜயகலா

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வருகை தராமல் இருப்பது கவலையளிப்பதாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு தலா 2000 ரூபாய் பெறுமதியான போஷாக்கு பொதிகளை வழங்கும் நிகழ்வு, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (27) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர் விஜயகலா, ‘பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தோம். எனினும், அவர் கலந்துகொள்ளவில்லை. அவருடன் வடமாகாண அமைச்சர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் இணைத்ததாக நடைபெறும் இந்நிகழ்வுக்கு அவர்கள் வருகை தராதது கவலையளிக்கின்றது. அவர்கள் வருகை தராமையானது தெற்கு அரசு இங்கு வடமாகாணத்தில் தனது செயற்பாடுகளை செய்வதற்கு இடமளிப்பதாக அமையும். என்ன கோபதாபங்கள் இருந்தாலும் அதை பொது நிகழ்வுகளில் முன்னிறுத்தாது கலந்துகொள்ள வேண்டும்’ என்றார்.

மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் ரோஸி சேனநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Posts