Ad Widget

முதன் முறையாக இலங்கை நீதிமன்ற வரலாற்றில் ஜீ.பி.எஸ். தொழில்நுட்பம்

GPS1இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக ஜீ. பி. எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் ஜீ. பி. எஸ். தொழில் நுட்பம் கடல் எல்லையை நிர்ணயித்து அடையாளம் காண்பதற்காகவும் பயன்படுத்தப்படும்.

மீனவர்கள், குற்றசெயல்புரிபவர்கள் கைதாகும் போது இந்திய கடற்பரப்பிலா அல்லது இலங்கை கடற் பரப்பில் இருந்தனர் என்ற பிரச்சினைக்கு இது தீர்வாக அமையலாம்.

குற்றம் சுமத்தப்பட்டோர் கைது செய்யப்படும் போது அவர்கள் கடலில் இருந்த இடத்தைச் சரியாக அடையாளம் காண ஜீ.பி.எஸ். தொழில்நுட்பத்தை பாவிக்க அரச சிரேஷ்ட சட்டத்தரணி மாதவ தென்னகோன் விடுத்த கோரிக்கைக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன அனுமதி வழங்கினார்.

நீதிமன்றத்தில் வீடியோ புரஜக்டரும் திரை ஒன்றும் பொருத்தப்படும். இதற்கும் நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

Related Posts