Ad Widget

முடிவுக்கு வந்தது மீனவர்களின் போராட்டம்!

வல்வெட்டித்துறை கிழக்கு மீனவர்கள் வட மாகாண சபை முன்றிலில் இன்று காலை 9.30 மணியளவில் இருந்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

valvai fisherman 54d

இழுவைப் படகு மீன்பிடியைத் தடை செய்தமையைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பெருமளவானோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மீன்பிடி அமைச்சுக்கும், அமைச்சருக்கும் எதரான வாசகங்களைத் தாங்கிய பதாகைகளைத் தாங்கியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேரை அழைத்து முதலமைச்சர் தலைமையிலான குழு ஒன்று பேச்சில் ஈடுபட்டது.

இப்பிரச்சினை வடமாகாண மீன்பிடி அமைச்சருடன் மட்டும் தொடர்புடைய விடயமல்ல. மத்திய மீன்பிடி அமைச்சருடனும் தொடர்புபட்டுள்ளதால் ஒரு வாரத்துக்குள் அவருடன் பேசி சுமுகமான முடிவு எட்டப்படும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீனவர்களுக்கு உறுதியளித்தார்.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

Related Posts