Ad Widget

முகமாலை,இத்தாவில் பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றப்பட்ட காணிகளில் மிள்குடியேற்றம்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முகமாலை, இத்தாவில் ஆகிய பகுதிகளில் ஏ-9 வீதிக்கு வடக்கேயுள்ள வெடிபொருட்கள் முற்றாக அகற்றப்பட்ட 1.7 கிலோமீற்றர் நீளமும் 200 மீற்றர் அகலமும் கொண்ட காணிகளில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக பச்சிலைப் பள்ளி பிரதேச செயலாளர் திருமதி ப.ஜெயராணி அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தெரிய வருவதாவது,

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இத்தாவில், முகமாலை ஆகிய பகுதிகள் இறுதி யுத்தத்தின் போதும் அதற்கு முன்னரான காலப் பகுதியிலும் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடைப்பட்ட யுத்த சூனிய பிரதேசமாகக் காணப்பட்ட பகுதியாகும்.

இங்கு இரு தரப்பினராலும் கண்ணி வெடிகள், மிதிவெடிகள் உட்பட அபாயகரமான வெடிபொருட்கள் புதைக்கப்பட்டுள்ளன.இவற்றினை கண்ணிவெடிகள் அகற்றும் பிரிவினர் மிகுந்த சிரமத்தின் மத்தியில் அகற்றி வருகின்றனர்.

தற்போது கண்ணிவெடி அகற்றப்பட் டுள்ள ஏ-9 வீதியின் வடக்குப் பக்கத்தில் 1.7 கிலோமீற்றர் நீளமும் 200 மீற்றர் அகலமும் கொண்ட காணிகளிலேயே குடியிருப்பாளர்களை குடியமர்த்துவது தொடர்பான கலந்து ரையாடல் ஒன்று அண்மையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போதே பிரதேச செயலாளர் மேற்படி விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.இதேவேளை இத்தாவில், முகமாலை மற்றும் ஏனைய பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டதன் பின்னர் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts