Ad Widget

மீள்குடியேற்றம் செய்யப்படும் கிராமங்களுக்கான பஸ் சேவைகள் விரைவில் – அரசாங்க அதிபர்

Suntharam arumai_CIயாழ். மாவட்டத்தில் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்படும் கிராமங்களுக்கான பஸ் சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் போக்குவரத்து ஆணைக்குழுவின் அலுவலகத்தினை திறந்து வைத்த பின்னர் சிறப்புரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், ‘யாழ். மாவட்டத்தில் 1991ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் சட்டத்தின் கீழ் பயணிகள் சேவை வழியனுமதிப்பத்திரம் 2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், 643 பேருந்துகளுக்கு வழி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 520 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், யாழ். மாவட்டத்தின் கிராம மட்டங்களில் போக்குவரத்து சேவையினை விருத்தி செய்வதன் மூலம் அபிவிருத்தி பாதையினை நோக்கி பயணிக்க முடியும் என்றார்.

அதேவேளை, யாழ். மாவட்ட மக்களுக்கு போக்குவரத்து சேவையினை முழுமையாக வழங்குவதற்கும், சேவையினை விருத்தி செய்வதற்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அலுவலகம் சிறந்த ஒத்துழைப்பினை வழங்குமென எதிர்பார்ப்பதாகவும்’ அவர் மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்தி

யாழ். மாவட்ட செயலகத்தில் போக்குவரத்து ஆணைக்குழுவின் அலுவலகம் திறந்துவைப்பு

Related Posts