Ad Widget

மீண்டும் யுத்தத்திற்குத் தயாராகும் அறிகுறியோ புலிகள் மீதான தடை நீக்கம்- ஜனாதிபதி

ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையினை நீக்கியுள்ளதானது ‘டயஸ் போரா’ மீண்டும் யுத்தத்திற்குத் தயாராகும் அறிகுறியோ என கருதத் தோன்றுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

mahintha_CI

பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதி சூழலையும் அபிவிருத்தியையும் கட்டியெழுப்பி வருகின்ற நிலையிலேயே ஐரோப்பிய யூனியன் தற்போது புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது.

இந்த திருப்பம் தொடர்பில் நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எமது அரசியல்வாதிகள் சிலர் ஐரோப்பா விற்கான விஜயத்தினை மேற்கொண்டதை அடுத்தே ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் இத்தடையை நீக்கியிருந்தது என்பதை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலைக்க பெண்கள் சந்தோசமாக இருப்பது முக்கியம். வீட்டிலும் பெண்கள் சந்தோசமாக இருந்தால் முழு குடும்பமும் சந்தோசத்தில் திளைக்கும். உலகளவில் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பெரிதும் துன்பப்படுபவர்கள் பெண்களே.

சிரியா, லிபியா, பலஸ்தீன், ஆப்கானிஸ்தான், நாடுகளில் மட்டுமன்றி எமது நாட்டில் யுத்தம் இடம்பெற்ற போதும் துன்பப்பட்டவர்களும் பெண்களே. நாட்டுக்கும் படையினருக்கும் தாய்மாரும் பெண்களும் வழங்கிய ஆசீர் வாதம் அவர்கள் கைகளில் இருந்த துப்பாக்கிகளைவிட பலமாக அமைந்தது. வெளிநாடுகளில் டொலர்களுக்காக செயற்பட்டவர்களால் பெண்களாகிய உங்களைப் பணியவைக்க முடியாமற் போனது.

2005ற்கு முன்பிருந்ததைப் போன்றல்ல. இப்போது நாடு மாற்றமடைந்துள்ளது. அச்சத்துடனும் சந்தேகத்துடனும் வாழ்ந்த யுகம், பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பி விட்டு வாயிலில் காவல் காத்த யுகம் இன்றில்லை. நாம் மஹிந்தோதய பாடசாலைகளை நிர்மாணித்துள்ளோம். நவீன உலகோடு நாம் முன்னேறிச் செல்கின்றோம். உலகத்தை வெல்லக்கூடிய எதிர்கால சந்ததியை உருவாக்குவதே எமது இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலரி மாளிகையில் நடை பெற்றது. சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் அவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Posts