2025 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் எந்தவிதமான திருத்தமும் மேற்கொள்ளாதிருக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை இன்று (14) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது PUCSL இன் தலைவர் பேராசிரியர் கே. பி. எல். சந்திரலால் வெளியிட்டார்.
பொதுமக்களின் ஆலோசனைகள், மின்சாரக் கணக்கீட்டு முறைகள் குறித்த மீளாய்வதை் தொடர்ந்து, அடுத்த மூன்று மாதங்களுக்கு கட்டணங்களை அதிகரிக்க வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாக PUCSL இன் தலைவர் குறிப்பிட்டார்.
இலங்கை மின்சார சபை (CEB), முன்னர் 2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் 6.8% அதிகரிப்பை முன்மொழிந்ததாக PUCSL தெரிவித்துள்ளது.
அதன்படி, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெற PUCSL முடிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.