Ad Widget

மினிபஸ் – ஓட்டோ விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

வல்லைவெளிப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பருத்தித்துறையிலிருந்து வந்த ஓட்டோ முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது யாழ்ப்பாணத்திலிருந்த சென்ற மினிபஸ்ஸுடன் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது.

ஓட்டோவில் பயணித்த ர.அஜந்தன் (வயது 13) என்பவர் உயிரிழந்தார். மு.ஜனார்த்தனன் (வயது 26) என்பவர் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Posts