Ad Widget

மாவிட்டபுரத்துக்கு இடமாற்றப்பட்ட காங்கேசன்துறை பொலிஸ் நிலையம்

policeவலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இயங்கிய காங்கேசன்துறை பொலிஸ் நிலையம், நாளை செவ்வாய்க்கிழமை முதல் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் இல்லத்தில் இயங்கவுள்ளது.

கடந்த பல வருடங்களாக காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுப் பிரதேசத்தில் பொதுமக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்படாத நிலையில் பொலிஸ் நிலையத்தின் தேவை இருக்கவில்லை.

தற்போது காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திறக்கு உட்பட பல கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கேசன்துறை பொலிஸ் நிலையமானது, பொதுமக்கள் சுதந்திரமாக சென்று தமது கடமைகளை நிறைவேற்றும் வகையில் உயர் பாதுகாப்பு வலயத்துக்கு அப்பாற்பட்ட பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றது.

இந்த பொலிஸ் நிலையத்தை நாளை காலை 8.30 மணிக்கு, வட பிராந்திய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா திறந்து வைக்கவுள்ளார். அத்துடன், காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.டி.பசநாயக்கா உட்பட பொலிஸ் உயரதிகாரிகளும் பொதுமக்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

Related Posts