Ad Widget

மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கிவைப்பு

emalda_gaயாழ்ப்பாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான கொடுப்பனவை சமூக சேவைகள் அமைச்சு வியாழக்கிழமை வழங்கியுள்ளது.

கோப்பாய் பிரதேச செயலகத்தில் அப்பிரதேச செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமார் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவை வழங்கினார்.

இதன்போது கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள 13 பேருக்கும் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 2 பேருக்கும் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒருவருக்கும் இக்கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. தலா 25,000 ரூபா படி இக்கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், நெடுந்தீவு பிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீடமைப்புத் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயனாளி ஒருவருக்கு இரண்டாம் கட்ட கொடுப்பனவாக ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்: இமெல்டா சுகுமார்

மாற்றுத்திறனாளிகளைச் சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்த இமெல்டா சுகுமார் , இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

இவர்கள் தங்களுக்கான வீட்டு வசதிகள், மலசலகூட வசதிகள் தொடர்பிலும் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் கணினி வசதி தொடர்பிலும் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்தத் தேவைகள் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தி அதற்குரிய ஏற்பாடுளை விரைவில் செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், மாற்றுத்திறன் கொண்ட சிறுவன் ஒருவனுக்கு பாடசாலை உபகரணங்களையும் அவர் வழங்கினார்.

Related Posts