Ad Widget

“மாறுதடம்” திரைப்படத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வைபவ ரீதியாக வெளியிட்டு வைத்தார்!

இலங்கை மற்றும் சுவிஸ் கலைஞர்கள் ஒன்றிணைந்து தயாரித்த “மாறுதடம்” திரைப்படத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

maruthadam-filim-1

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் (02) இத்திரைப்படம் மக்கள் பார்வைக்கு வைபவரீதியாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

முன்னதாக அமைச்சர் உள்ளிட்ட அதிதிகளால் மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டது.

maruthadam-filim-2

அடுத்து வைபவ ரீதியாக அமைச்சர் அவர்கள் திரைப்படத்தினை மக்கள் பார்வைக்காக ஆரம்பித்து வைத்தார்.

புலம்பெயர்ந்த மக்களது வாழ்வியலை சித்தரிக்கும் முகமாக தயாரிக்கப்பட்ட “மாறுதடம்” திரைப்படம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியின் பயனாக இன்றைய தினம் மக்கள் பார்வைக்கு வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்தில் இலங்கை மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகளின் கலைஞர்கள் தமது ஒன்றிணைந்த கலைப் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

maruthadam-filim-3

இத் திரைப்படத்தை சுவிஸ்லாந்தில் வாழும் புலம்பெயர் உறவான ரமணன் இயக்கியுள்ளார்.

இதன்போது ஈ.பி.டி.பியின் சர்வதேச இணைப்பாளர் மித்திரன், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா உள்ளிட்டோருடன் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

இத்திரைப்படம் கடந்த 25ம் திகதி ராஜா திரையரங்கில் திரையிட்டபோது பொலிஸாரினால் இடை நடுவில் நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மாறுதடம் திரைப்படத்திற்கு யாழில் தடை ஏன்?

“மாறுதடம்” படத்தை இடைநிறுத்திய பொலிஸார்

Related Posts