Ad Widget

மாயமான விமானத்தை கண்டுபிடிக்க 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகுமாம்!

மாயமான எம்.எச் 370 விமானத்தை தேடும் பணி நிறைவடையை பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகலாம் என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

-malaysian-airlines

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி மாயமானது. இதனை தேடும் பணி இந்திய பெருங்கடலில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.

மேலும், காணாமல் போனதற்குப் பின்னரும் கூட பல மணி நேரம், இந்தியப் பெருங்கடல் மீது விமானம் பறந்திருக்கலாம் என்று புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், விமானத்தை தேடும் பணி நிறைவடைய இன்னும் பத்தாண்டுகள் நீடிக்கலாம் என்று மலேசியன் ஏர்லைன்சின் வணிக தலைவர் ஹக் டன்லேவி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “விமானத்தின் சேதப்பகுதிகள் இந்திய பெருங்கடலின் பெரிய பரப்பில் பரந்து விரிந்து கிடக்க வாய்ப்புகள் உள்ளன. விமானத்திற்கு சில அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. விமானம் திரும்பி வந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் விமானத்தால் மீண்டும் தளத்திற்கு வரமுடியாமல் சென்றுள்ளது. அது தென் இந்திய பெருங்கடலின் சில பகுதியில்தான் விபத்துக்குள்ளாகியிருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.

Related Posts