Ad Widget

மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி தற்காலிகமாக பணி நீக்கம்?

policeமானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி மல்கம் பேட்டை பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆணைக்கோட்டைப் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு பொலிஸ் கான்டபிள் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வாள் வெட்டிக்கு இலக்காகியிருந்தார்.

இச்சம்பவத்தினை தொடர்ந்தே நேற்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி கடமையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

பொலிஸ் ரோந்து நடவடிக்கைக்கு 5 பேர் கொண்ட குழுவினரை நியமிப்பது வழக்கம், ஆனால், அன்றைய தினம் பொலிஸ் ரோந்து நடவடிக்கைக்கு 3 பேர் கொண்ட குழுவினரை மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி நியமித்துள்ளார்.

இதனைக் கண்டித்தே, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தரவின் பேரில், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி மல்கம் பேட்டையை தற்காலிகமாக பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் எண்மரை பொலிஸார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டதாகவும் அவர்களை யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

ரோந்து சென்ற பொலிஸார் மீது தாக்குதல்!

Related Posts