Ad Widget

மாநகரசபை ஊழியர்களை தாக்கியவர்களில் ஒருவர் கைது

arrest_1யாழ். மாநகரசபை ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட 16 பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.எல்.விக்கிரமராச்சி தெரிவித்தார்.

யாழ். கொட்டடி மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை பகல் யாழ். மாநகர சபை சுகாதார ஊழியர்களுக்கும் மற்றும் நாவாந்துறையைச் சேர்ந்த மீன் வியாபாரிகளுக்கும் இடையில் வாக்குவாதம் எற்பட்டது.

இந்த வாக்குவாதத்தின் போது, நாவாந்துறையைச் சேர்ந்த 16 மீன் வியாபாரிகள் யாழ். மாநகர சபை சுகாதார ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களளை வாளால் வெட்டியுள்ளதுடன் பொல்லால் தாக்கியுமுள்ளனர் என்று பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த ஐவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கிசிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தினைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையினை அடுத்து தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும், யாழ். சிறுகுற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்தி

மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து தொழிற்சங்க போராட்டம்

Related Posts