Ad Widget

மாதகலில் மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது காணி அளவீடு

மாதகல் பகுதியில் கடற்படையின் தேவைக்காக காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

இன்று நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு சென்று காணிகளை அளக்க முற்பட்ட வேளை காணி உரிமையாளர்கள் தமது காணி இதனை அளவீடு செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் குறித்த நில உரிமையாளர்களுக்கும் நில அளவைத் திணைக்கள ஊழியர்களுக்கும் இடையில் வாய்த் தர்க்கம் ஏற்படவே, நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இது உங்களுடைய காணி என்றால் அதற்கான காணி உறுதிப் பத்திரத்தை காட்டுமாறு குறித்த நில உரிமையாளரிடம் கோரினார்.

இதனை ஏற்றுக் கொண்ட காணி உரிமையாளர்கள் தனது காணிக்குரிய உறுதிப் பத்திரத்தை காட்டியதுடன், குறித்த பகுதியினை கடற்படையினருக்கு வழங்க முடியாது என்று கூறி எழுத்து மூலமான ஒரு கடிதம் ஒன்றையும் நில அளவைத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்தனர்.

இதன் காரணமாக குறித்த காணி உரிமையாளரின் அனுமதியின்றி காணியினை அளவீடு செய்ய முடியாது என்று கூறி நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் திரும்பிச சென்றனர்.

இன்றைய தினம் கடற்படையினரின் தேவைக்காக 4 பரப்பு காணி சுவீகரிக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts