மாணவர்களுக்கு காலணிகள் அன்பளிப்பு

யாழ்.வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் 80 மாணவர்களுக்கு தலா 1000 ரூபா பெறுமதியான காலணிகள் வியாழக்கிழமை (11) வழங்கப்பட்டன.

10616601_707507889331085_4407831233334922465_n

10698532_707508225997718_8563308662029611512_n

இந்த காலணிகள் வட்டு மத்திய கல்லூரியில் வைத்து இந்து வாலிபர் சங்க பொருளாளர் க.ரகுமான் வழங்கினார்.

இந்த இந்து வாலிபர் சங்கத்தால் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு உதவிகள் வழங்கும் நடவடிக்கைகள், வாழ்வாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு வாழ்வாதார மற்றும் சுயதொழில் கடன் உதவிகள் உள்ளிட்ட பல உதவிகள் அங்கத்தவர்களின் நிதியுதவியின் மூலம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts