Ad Widget

மாணவர்களின் ஆங்கிலம் பேசும் ஆற்றலைக்கண்டு வியப்புற்றேன் – த.குருகுலராஜா

யாழ்ப்பாணம் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் மாணவர்கள் ஆங்கிலம் பேசும் ஆற்றலைக்கண்டு நான் வியப்புறுகின்றேன். இந்தக் கல்லூரியிலே கற்ற மாணவர்கள் இந்த மேடையிலே ஆங்கிலத்திலேயே பேசி இருக்கிறார்கள். அவர்கள் கடினமான சொற்களைக்கூட அதன் அர்த்தங்களைப் புரிந்து லாவகமாக ஆங்கில மொழியினைப் பேசியிருப்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றது.

e-city1

மிகக்குறுகிய காலத்தில் இவ்வாறு ஆங்கில மொழியினைக் கற்றுப் பேசுவது வியப்புக்குரியதாக உள்ளது. அத்துடன் இந்த ஈ-சிற்றி ஆங்கில கல்லூரியானது உலகப்புகழ்பெற்ற வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து அந்த நிறுவனங்களின் சான்றிதழ்களை வழங்கி வருவது இந்த நிறுவனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

மேற்கண்டவாறு யாழ்ப்பாணம் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூயின் பட்டமளிப்பு சான்றிதழ்கள் வழங்கும் வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண கல்வி, பண்பாடடலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ த.குருகுலராஜா தெரிவித்தார்.

இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் ஹோட்டலில் ஈசிற்றி ஆங்கலக் கல்லூரியின் தலைவர் லயன் ஜெ.றஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் இந்த நிறுவனத்தால் வழங்கப்படும் சான்றிதழ்கள் மூலம் மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

மேலும் யாழ்ப்பாணத்தில் 30 இற்கும் மேற்பட்ட புகழ்பூத்த பாடசாலைகள் காணப்பட்டன எனவும் அதில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியும் ஒன்று எனவும் இதற்குக் காரணம் இக்கல்லூரிகளை நிர்வகித்த அதிபர்களே முதுகெலும்பாகத் திகழ்ந்தார்கள் எனவும் குறிப்பட்டார்.

e-city2

இவ்விழாவில் சான்றிதழ்களை யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் போராசிரியர் பி.கோபாலகிருஸ்ண ஐயர் வழங்கிக் கௌரவித்தார். சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியத் தலைவர் சிவசிறி வாசுதேவக்குருக்களும் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் அதிபர் மௌலவி முபாரக் ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர்.

யாழ்பாண கல்விவலயப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.பொ.அருணகரிநாதன், வடமாகாண சபை உறுப்பினர்கள் கௌரவ விந்தன் கனகரட்ணம், அயூப் அஸ்மின் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு.த.நடனேந்திரன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

Related Posts