Ad Widget

மாகாண சபைகளைக் கட்டுபடுத்தும் நாடாளுமன்ற சட்டமூலத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கவேண்டும் : சுரேஸ்

மாகாணசபைகளை நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான சட்டமூலம் இயற்றப்பட்டால் அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கவேண்டுமென ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கையில் வடக்குக் – கிழக்கு மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவே மாகாணசபை கொண்டுவரப்பட்டது.

ஜனநாயக விரோதமான முறையில் நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் மாகாண சபைகளை அரசாங்கம் வைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அதற்காக சட்டமூலம் கொண்டு வர ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது.

தொடர்ச்சியாக மாகாண சபைக்குரிய நடவடிக்கைகளை நாடாளுமன்றமே மேற்கொள்ளுகின்ற சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக சந்தேகம் பொது மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது.

இதனால்தான் தேர்தல்கள் நிராகரிக்கப்பட்டு, அதிகாரங்கள் ஆளுநர் கையிலும் அதிகாரிகள் கையிலும் செல்ல வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு செல்லுமாக இருந்தால் தமிழ் மக்களுக்கான ஜனநாயகம் பறிக்கப்பட்டு விடும்.

எமது அபிவிருத்தியை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மிக நீண்ட காலம் போராடி அற்ப சொற்பமாக வந்த அதிகாரங்களை அரசாங்கம் பறித்தெடுத்து தாம் இதை கொண்டு நடாத்துமாக இருந்தால் அவ்வாறான சூழலை ஏற்படுத்தப்பட முடியாது. அதனை நாம் எதிர்ப்போம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை எதிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Related Posts