Ad Widget

மஹிந்த ராஜபக்ஷ தம்பதியினர் ஜெருசலேம் வணக்கஸ்தலத்தை தரிசித்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் முதற் பெண்மணி ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ அவர்களும் கடந்த புதன்கிழமை (08) பிற்பகல் இஸ்ரேலின் ஜெருசலேம் புராதன நகரத்தில் மத வணக்கஸ்தலத்தை தரிசிக்க சென்றனர்.

mahintha-jarusalem

கிறிஸ்தவ, இஸ்லாம், யூத மதங்களின் வணக்கஸ்தலங்கள் பல இந்த வரலாற்று ரீதியான புராதன நகரத்தில் அமைந்திருக்கின்றன.

உலக இஸ்லாமிய மக்களின் மிகப் புனித ஸ்தலமாக விளங்குகின்ற மலைச் சிகர (Dome of the Rock) வணக்கஸ்தலத்தை தரிசிக்க சென்ற ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களை இஸ்லாமிய மதத் தலைவர்கள் வரவேற்றனர். முகமது நபி அவர்கள் சுவர்க்கம் அடைந்தது இவ்விடத்தில் என நம்பப்படுகிறது.

ஜனாதிபதி அவர்கள் அழும் சுவர் எனப் புகழ்பெற்ற கொட்டேல் எனும் மேற்கு சுவரையும் பார்வையிட்டார். மலைக் கோயிலில் (Temple Mount) தற்பொழுது எஞ்சியுள்ள ஒரே பகுதியான மேற்கு சுவர் யூத பக்தர்களின் வணக்க ஸ்தலமாகும்.
நேற்று பகல் இஸ்ரேல் பிரதம அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாகு (Benjamin Netanyahu) அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததன் பின்னர் ஜனாதிபதி அவர்கள் தமது பாரியாருடன் புராதன நகரத்திற்கு விஜயம் செய்தார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, சனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோயர் சனாதிபதியுடன் இந்த புராதன நகரத்திற்கு சென்ற பயணத்தில் இணைந்து கொண்டனர்.

Related Posts