Ad Widget

மருத்துவர் ஜெயக்குமாரின் வீட்டுக்குப் பொலிஸ் காவல்

யாழ்.போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஜெயக்குமாரை அச்சுறுத்தும் விதமாக அவரது வீட்டின் முன்னால் இரு மர்ம நபர்கள் நடமாடியதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து மருத்துவ நிபுணரின் வீட்டுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.ஜெப்றி தெரிவித்தார்.

கடந்த முதலாம் திகதி இரவு 9.30 மணியளவில் மருத்துவரின் வீட்டில் உள்ளவர்கள் நித்திரைக்குத் தயாராகிக்கொண்டிருந்தனர். அப்போது அவரது வீட்டின் முன் வாசல் பகுதியில் இருவர் உரையாடும் சத்தம் கேட்டுள்ளது.

இந்தச் சத்தத்தைக் கேட்டதும் மருத்துவரின் வீட்டிலுள்ளவர்கள் மின்குமிழை ஒளிரச் செய்து பின்னர் கதவைத் திறந்து வெளியே சென்றுள்ளனர். இதன்போது குறித்த மர்ம நபர்கள் அங்கிருந்து ஓடித்தப்பியுள்ளனர்.

குறித்த இரு மர்ப நபர்களும் வீட்டின் வெளியே நின்று இதுதான் அந்த டாக்டரின் வீடு என்று பேசிக்கொண்டதாக புற்றுநோய் மருத்துவ நிபுணர் என்.ஜெயக்குமாரின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து புற்றுநோய் மருத்துவ நிபுணரால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணரின் முறைப்பாட்டைத் தொடர்ந்து அவரது வீட்டுப் பகுதியில் பொலிஸ் ரோந்து அதிகரிக்கப்பட்டள்ளதுடன் அவரது வீட்டுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts