‘மரணபூமியின் மேல் இசை நிகழ்ச்சியை நடத்துகின்றோம்’

இசைநிகழ்ச்சியை நடத்துபவர்கள் ஒவ்வொருவரும் ‘மரணபூமியின் மேல் இசை நிகழ்ச்சியை நடத்துகின்றோம்’ என்பதை நினைவிற் கொள்ளுங்கள் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஐpலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘யாழ். நகரில் எதிர்வரும் 9ஆம் திகதி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கலந்துகொள்ளும் ‘நண்பேன்டா’ இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கு 200, 1,000, 5,000 ரூபாய் பெறுமதியில் நுழைவுச் சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள், மில்லியன் கணக்கில் பணத்தைச் சுருட்டிக் கொண்டு போவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அவ்வாறு அவர்கள் திரட்டும் பணத்தில் ஒரு பகுதியை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்’ என்றார்.

Related Posts