Ad Widget

மன்னார் கல்வி வலயத்தில் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வடமாகாணச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரம் இன்று செவ்வாய்க்கிழமை (10.06.2014) மன்னாரில் மன்னார் வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.3

7

8

9

10

11

12

13

14

15

மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் மீ.மு.ஸியான் தலைமையில் அல் அஸ்கார் தேசியப் பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினர்களாக வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,வடமாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் கலந்து கொண்டு சூழல் பாதுகாப்புத் தொடர்பாக உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியின்போது மன்னார் கல்வி வலயத்துக்கு உட்பட்ட கோட்டங்களுக்குரிய சுற்றாடல் பாதுகாப்பு ஆணையாளர்களுக்கான நியமனக் கடிதங்களை அமைச்சர் த.குருகுலராஜா வழங்கி வைத்தார்.

நிகழ்ச்சியின் முடிவில் விருந்தினர்களும் மாணவர்களும் பாடசாலையில் இருந்து பிரதான வீதிகளினூடாக மன்னார் பெரிய பாலம் வரைக்கும் ஊர்வலமாகச் சென்று கடற்கரையைச் சுத்தப்படுத்தும் சிரமதானத்தில் ஈடுபட்டனர்.

சிரமதானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இராணுவப் புலனாய்வாளர் சிலர் மாணவிகளை வரிசையாக நிற்க வைத்துப் புகைப்படமெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இது, அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து அவர், அவர்களைப் புகைப்படங்களை எடுக்கவிடாது தடுத்ததோடு வற்புறுத்தி அவ்விடத்திலிருந்து அகலவும் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர்கள் வைத்தியகலாநிதி ஞா.குணசீலன், அ.அஸ்மின், வடமாகாண கல்விப் பணிப்பாளர் ஆ.ராஜேந்திரன், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மன்னார் மாவட்ட அதிகாரி ஹிமலதா ராஜேஸ்வரன் உட்பட மன்னார் கல்வி வலயத்தின் பல்வேறு பாடசாலைகளையும் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பெருந்தொகையானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால் நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு யூன் 5 தொடக்கம் யூன் 11 வரையான ஒருவார காலப்பகுதியை வடமாகாணச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரமாகப் பிரகடனப்படுத்தியதையடுத்து வடமாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

2

Related Posts