மனித உரிமை ஆர்வலர்களின் பார்வை தம்மீது திரும்ப வேண்டும்: ஈழ அகதிகள் கோரிக்கை

இந்தோனேசியாவில் நீர்கூட அருந்தாமால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகினற ஈழத் தமிழர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் யுத்தம் தீவிரமாக இடம்பெற்ற காலப் பகுதியில் சட்டவிரோதமாக அவுஸ்ரேலிய நோக்கி பயணித்த ஈழத் தமிழ் மக்கள் இந்தோனேசிய கடற் படையினரால் கைது செய்யப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் அவர்களுக்கு இந்தோனேஷியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்படவில்லை. அதேவேளை, அவுஸ்ரேலியா போன்ற குடியேற்ற நாடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படவும் இல்லை.

இந்நிலையில், அவர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு இந்தோனேசிய அரசாங்கம் ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

எனினும், இந்தோனேஷிய அரசாங்கத்தினால் இதுதொடர்பில் எதுவித அக்கறையும் காண்பிக்கப்படாத நிலையில் 5 ஆவது நாளாக போராட்டம் தொடர்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தங்களது அவல நிலை தொடர்பில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கரிசனை செலுத்த வேண்டும் என்பதே இந்தோனேஷியாவில் ஏதிலிகளாக இருக்கின்ற மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

Related Posts