Ad Widget

மந்திகை வைத்தியசாலை மருத்துவர்கள் செவ்வாயன்று சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்!!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகரை இடமாற்றும் கோரிக்கைக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சு சாதகமான பதிலை வழங்காததால் வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவர்கள் நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணி தொடக்கம் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

இவ்வாறு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் சங்கம் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன், இன்று மேலதிக பொறுப்பாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையேற்ற நிலையில் அவருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகரை இடமாற்றம் செய்வது தொடர்பாக எவ்விதமான சாதகமான பதில்களும் எட்டப்படவில்லை.

இப்போது கோரோனா நோய்த்தொற்றில் இருந்து , மக்களுடையதும் மருத்துவர்களதும் ஏனைய சுகாதார உத்தியோகத்தர்களினதும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்வதற்காக எமது நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற எதுவிதமான சாதகமான பதிலும் மாகாண சுகாதார அமைச்சிலிருந்து கிடைக்கப் பெறாததால் நாம் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

நாளை (இன்று) 13/04/2020 அன்று 10 மணிக்கு இடம்பெறும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரிகளின் பொதுக்குழுக்கூட்டத்தில் அடையாள சேவைப்புறக்கணிப்பா அல்லது முழு நேர சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடுவதா என்பது தொடர்பான தீர்க்கமான முடிவு எட்டப்படும்.

மேலும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அத்தியேற்சகரை உடனடியாக இடமாற்றம் செய்யும் கோரிக்கையை முன்வைத்து நாளைமறுதினம் (ஏப்ரல் 14) செவ்வாய்கிழமை 8 மணி தொடக்கம் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளோம் என்பதை தெரியபடுத்திக்கொள்கின்றோம் – என்றுள்ளது.

Related Posts