Ad Widget

மட்டு சமுத்திரவியல் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பம் கோரல்

மட்டக்களப்பு சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் குறுகிய கால பயிற்சிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஏழு மாதங்களுக்கு நடைபெறும் இப்பயிற்சிகளில் தேசிய தொழிற் சான்றிதழ் (என்.வி.கியூ) கற்கை நெறிகளான கடற்துறை வெல்டிங் தொழில்நுட்பவியலாளர், கடற் சுழியோடிகள், சமுத்திரவியல் இயந்திர தொழில்நுட்பவியலாளர், வெளிப்புறத்தில் பொருத்தும் என்ஜின் தொழில்நுட்பவியலாளர், கடற்தொழில் தொழில்நுட்பவியலாளர், கப்பல் தலைமைத்துவத்துக்கான பயிற்சி ஆகியன 6 மாதங்களைக் கொண்டதாக நடைபெறுகின்றன.

குறுகிய காலப் பயிற்சிகளாக நீச்சல் பயிற்சி, கடல் வரைபடங்களை வாசித்தல் தொடர்பாடல் மற்றும் செய்மதி செயற்படுத்தல் ஆகிய பயிற்சிகள் ஒரு மாத காலத்தைக் கொண்டதாகவும் அமைந்துள்ளன.

இதேவேளை, வெளி இணை இயந்திரம் பழுது பார்த்தல், வலை பின்னலும் திருத்துதலும், வைபர் படகு திருத்துதல் உணவு பதனிடலும் அறுவடைக்குப் பிந்திய முகாமையும், உயிர் பாதுகாப்பு – முதலுதவி ஆகிய பயிற்சிகள் ஒரு வார காலத்துக்குட்பட்டவையாகவும் அமைந்துள்ளன.

உதவிப் பணிப்பாளர், சமுத்திரவியல் பல்கலைக்கழகம், நாவலடி, மட்டக்களப்பு என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Related Posts