Ad Widget

மக்களுக்கு சேவை புரிய அரசியல்வாதிகளும் அரச உத்தியோகத்தர்களும் ஒன்றிணைய வேண்டும்

மக்களுக்கான சிறந்த சேவைகளை ஆற்றுவதற்கு அரசியல் பிரமுகர்களும், அரசாங்க உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

workshop--3

கொழும்பில் அமைந்துள்ள இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (03) இடம்பெற்ற அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதிப் பணிப்பாளர் ஆகியோர் யாழ்.மாவட்டத்தில் எந்த பிரதேச செயலர் பிரிவில் பயிற்சிப்பட்டறை நடத்த வேண்டுமென என்னிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக முன்னுரிமையடிப்படையில் வேலணை பிரதேச செயலர் பிரிவை தெரிவு செய்திருந்தேன்.

இவ்வாறான பயிற்சிப் பட்டறைகள் மூலம் எமது மாவட்ட மக்கள் நன்மையடைய வேண்டும்.

இந்தப் பயிற்சிப் பட்டறையில் மொழி ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கின்றது. இதுவிடயம் குறித்து பிரதிப் பணிப்பாளர் எனது கவனத்திற்கு தெரியப்படுத்தியிருந்தார்.

இவ்வாறான பயிற்சிப் பட்டறைகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகளும் அரசாங்க உத்தியோகத்தர்களும் கலந்து கொள்வது முக்கியமானது.

அதனூடாகவே மக்களுக்கான சிறந்த சேவைகளை அரசியல் பிரதிநிதிகளும் அரசாங்க உத்தியோகத்தர்களும் இணைந்து திறம்பட முன்னெடுக்க வேண்டும்.

எதிர்காலத்தில் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வோர் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் பயிற்சிப் பட்டறைகள் நடாத்தப்படவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது வடமாகாணத்தில் ஏனைய மாவட்டங்களிலும் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறான பயிற்சிப் பட்டறைகளுக்கான நிதி மற்றும் ஏனைய உதவிகளையும் வழங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கேட்போர் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர் சுயான் நாணயக்கார தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகளும் அரசாங்க உத்தியோகத்தர்களும் மக்களுக்கான சேவைகளை ஒன்றிணைந்து செயற்படும் வகையில் இப்பயிற்சிப் பட்டறை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இம்மாதம் முதலாம் திகதி ஆரம்பமான பயிற்சிப் பட்டறையானது 5 நாட்கள் நடைபெற்று நாளை 5ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts