Ad Widget

மகாவலி கங்கையை வடக்கிற்கு திருப்பியாவது யாழ் விவசாயிகளின் கஸ்டங்களை தீர்த்து வைப்போம்…! – பசில் ராஜபக்ஸ

angajan-pasil (9)மகாவலி கங்கையை வடக்கிற்கு திருப்பியாவது யாழ் விவசாயிகளின் கஸ்டங்களை தீர்த்து வைப்போம்…!கடந்த 07.09.2013 சனிக்கிழமையன்று புத்தூர் கலைமதி கிராமத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் பிரசாரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமாகிய பசில் ராஜபக்ஸ கலந்து கொண்டு, உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து கூறுகையில்

வடக்கு மக்களுக்கு நாம் வழங்கியிருக்கின்ற இந்த மாகாண சபைத் தேர்தல் உங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி போன்றது. அபிவிருத்தியின் ஊடாக உங்களின் அபிலாசைகளை பெற்றுக் கொள்வதற்கு கிடைத்த இந்த முதல் சந்தர்ப்பத்தை சரியாக நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

இந்த பிரதேசம், விவசாயத்தை அடிப்படையாக கொண்டிது. இந்தப்பகுதியில் விளையும் மரக்கறிகள் தென்னிலங்கை மக்களினால் விரும்பி உண்ணப்படுகின்றது. இருப்பினும் விவசாயிகளுக்கு பல கஸ்டங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நாம் படிப்படியாக தீர்த்து வைத்து வருகின்றோம். நீர்ப்பாசனம், விவசாய நலத்திட்டங்கள், உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாயப்புகளில் எம்மால் பல முன்னேற்றங்களை இப்பகுதி மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க முடிந்திருக்கின்றது. இன்னும் செய்ய முடியும். அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் தேவை. எம்மை பலப்படுத்துவதன் ஊடாக உங்களை நீங்கள் பலப்படுத்துங்கள்.

இந்த மக்களிடம் நான் சொல்லிக் கொள்கின்றேன். மகாவலி கங்கையை வடக்கிற்கு திருப்பியாவது யாழ் மாவட்ட விவசாயிகளின் கஸ்டங்களை தீர்த்து வைப்போம். எனவே மக்களே இது உங்களுக்கான தருணம். உங்களுக்காக சேவையாற்றக் கூடிய வேட்பாளர்களை நீங்கள் தேர்ந்தெடுத்து மாகாண சபைக்கு அனுப்பி வைத்தால் நீங்கள் கொழும்பிற்கு எங்களிடம் வரவேண்டிய தேவையிருக்காது. உங்கள் மாகாண சபை பிரதிநிதிகள் உங்களோடு இருந்து உங்கள் தேவைகளை தீர்த்து வைப்பார்கள். என்றார்.

Related Posts