Ad Widget

பௌர்ணமியன்று சிவந்த நிலவை காணலாம்

எதிர்வரும் 8ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று பூரண சந்திரக்கிரகணம் நிலவுவதால் சிவந்த நிறத்திலான நிலவை காணக்கூடியதாக இருக்கும் என்று வானவியல் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

red-moon

இருப்பினும், இந்த சந்திர கிரகணத்தை இலங்கையில் முழுமையாக காணக் கிடைக்காது என்றும் சந்திரக் கிரகணத்தின் இறுதிக் கட்டத்தை மாத்திரம் மாலை நேரத்தில் இலங்கையில் காணலாம் என்றும் வானவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும் அவுஸ்திரேலியா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளிலும் இந்த சந்திரக்கிரகணத்தை முழுமையாக காணலாம் என்று வானவியல் நிபுணர் அநுர சீ.பெரேரா தெரிவித்தார்.

இந்த சந்திரக்கிரணகம் காரணமாக, பௌர்ணமி தினத்தன்று இரவு சிவந்த நிலவைக் காணலாம் என்றும் இதற்கு ‘ரெட் மூன்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts