Ad Widget

போலி கேணலிடம் ஏமாந்தவர்கள் முறையிடவும்: பொலிஸார்

policeஇராணுவ அதிகாரி கேணல் ரூபன் பத்திரண என்ற பெயரைக் குறிப்பிட்டு பணமோசடி மற்றும் காணிப் பிரச்சினை தொடர்பான மோசடிக்கு உள்ளான நபர்கள் இருந்தால் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எ. டபிள்யு. எல். விக்கிரமராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தான் முன்னாள் ஓய்வு பெற்ற இராணுவ கேணல் என கூறி பல பணமோசடி செய்துள்ள கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஹெட்டியாராட்சி (வயது 38) என்ற நபரிடம் ஏமாந்தவர்களையே முறையிடுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

குறித்த நபர் யாழில். மிலேனியம் விருந்தினர் விடுதியில் கடந்த முதலாம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை தங்கியிருந்துள்ளார்.அவர், விடுதிக்கு செலுத்த வேண்டிய 38 ஆயிரம் ரூபா பணத்தினை செலுத்தாது தப்பிச் செல்ல முற்பட்ட வேளை விடுதியின் பணியாளர்களினால் பிடிக்கப்பட்டு, யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

தான் ஓய்வு பெற்ற இராணுவ கேணல் என கூறி பல பணமோசடி செய்ததுடன், காணி பிணக்குகளையும் தீர்த்து வைத்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அந்த வாக்குமூலத்தின் பிரகாரம் இவர் யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு இராணுவ கேணல் ரூபன் பத்திரண என்ற பெயரைக் கூறியவரிடம் பணமோசடி மற்றும் காணி பிணக்குகள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களையே முறைப்பாடு செய்யுமாறு பொலிஸ் பொறுப்பதிகாரி பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts