Ad Widget

போருக்குப் பின் வடக்கில் மதுபான நுகர்வு அதிகரிப்பு! – சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

போருக்குப் பின்னர் வடக்கில் அதிகளவு மதுபானம் நுகரப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா கவலை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், 2009ம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் மதுபான நுகர்வு அதிகரித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நூற்றுக்கு 34 வீதத்தில் மதுபான பயன்பாடு அதிகரித்துள்ளது.

போர் காரணமாக அழுத்தங்களை எதிர்நோக்கியமை இதற்கான காரணமாக இருக்கக் கூடும். இளைஞர்கள் மதுபானம் அருந்தப் பழகுவது மிகவும் ஆபத்தானதாகும்.

வரி வருமானம் அதிகளவில் கிடைக்கும் காரணத்தினால் மது பயன்பாட்டை தடுப்பதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts