Ad Widget

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை போப் சந்திக்கக் கூடும்

அடுத்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள போப் பிரான்சிஸ், போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களைச் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

pop-papprasar

இதற்கான ஒரு கோரிக்கை வடகிழக்கு தமிழ் சிவில் சமூக அமைப்பால் போப்பிடம் வைக்கப்பட்டுள்ளதை, உறுதிப்படுத்தினார், மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்.
போப் பிரான்சிஸின் பயணத்தின்போது, மடுமாதா தேவாலயத்தில் காலஞ்சென்ற ஒரு கத்தோலிக்க பாதிரியாரைப் புனிதராக அறிவிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்திக்க வேண்டும், இவை இரண்டும் இல்லையென்றால், அவரது வருகையானது காலத்துக்கு முதிர்ச்சி அடையாததாகத்தான் இருக்கும் எனவும் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்தார்.

போப் பிரான்சிஸ் தமது வேண்டுகோளை ஏற்றுக் கொள்வார் என்று தாங்கள் நம்புவதாகக் கூறும், மன்னார் ஆயர், தமது கோரிக்கை அவரது பிரதிநிதி மூலம் ரோமுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மன்னார் மாவாட்டம் மடுப் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டவர்களை போப் சந்திப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில், இறைவனிடம் அவர்களின் விடுதலைக்காக, மகிழ்ச்சிக்காக, சுதந்திரத்துக்காக மக்களுடன் சேர்ந்து அவர் அங்கு ஜெபிக்க வேண்டும் என்று தமது தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆயர் ராயப்பு ஜோசப் கூறுகிறார்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காவும், அவர்களது உரிமகளுக்காகவுமே, நீதியையும் உண்மையையும் அடிப்படையாகக் கொண்டே அந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாவும் மன்னார் ஆயர் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு ஜனவர் மாதம் 13 ஆம் தேதி இலங்கை வரும் போப் பிரான்சிஸ், கொழும்பு மற்றும் மன்னார் பகுதியில் திருப்பலி மற்றும் ஜெபக் கூட்டங்களில் கலந்துகொண்ட பிறகு, 15 ஆம் தேதி காலை பிலிப்பைன்ஸ் செல்கிறார். அவர் யாழ்ப்பாணத்துக்கு செல்லும் வாய்ப்பு இல்லை என்றும் ராயப்பு ஜோசப் தெரிவித்தார்.

Related Posts