Ad Widget

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்க உறுப்பினர்களின் தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை: ஈ.பி.டி.பி

daklasபோரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் மற்றும் பொருளாளர் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா பொறுப்புக் கூறவேண்டுமென குறித்த இயக்கத்தின் தலைவர் வி. சகாதேவன் தெரிவித்தார்.

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிரான துண்டுப் பிரசுரத்தினை யாழ். கச்சேரி பகுதியில் விநியோகிக்கும் போது இந்த சம்பவம் நடைபெற்றது.

இத்தாக்குதல் சம்பவத்தின் போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கச்சேரி வீதியால் சென்றதாகவும் அவர் அந்த வீதியை கடந்து 10 நிமிடங்களின் பின்னர் அமைச்சருக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்கிறாயா என கேட்டு மண்வெட்டி பிடியால் தாக்குதல் மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.

இத்தாக்குதல் சம்பவத்தினை ஒத்துப் பார்க்கும் போது, சம்பவத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் செய்திருக்கின்றார்கள் என்பது உறுதிப்படுத்தப்படுகின்றதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், தாக்கப்பட்டவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலை பொலிஸார் கூட இதுவரை நேரத்தில் தாக்குதலுக்கு இலக்காகியவரிடம் விசாரணை மேற்கொள்ளவில்லை என்றும் பொலிஸ் சீருடையில் வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேறும் போது, யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறும் கூறியுள்ளதாக அவர் கூறினார்.

இந்த நிலையில், பாதுகாப்பு இல்லை என்றும் பொலிஸ் விசாரணை மேற்கொள்ளாத நிலையில் தமது பாதுகாப்பினை எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்வதென்றும் அவர் கேள்வி எழுப்பினார்.அத்துடன், சட்டம் கூட தவறாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த விடயம் தொடர்பாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரின் உயர்மட்டக் குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வன்முறைகளில் நம்பிக்கையற்றவர், ஜனநாயக பாதையில் முழு மூச்சாக செல்பவரின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதற்காக பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகின்றதாக அவர்கள் கூறினார்கள்.

அத்துடன், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயத்தினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் பொய்யென்றும்” அவர்கள் குறிப்பிட்டார்கள்.

Related Posts